Waytha's Blog Waytha's Blog
Waytha's Blog Waytha's Blog

பொன்.வேதமூர்த்தி மன்னிப்பு தலைமைத்துவ பண்பின் மேன்மை!!

கோலாலம்பூர், நவ.10:

அரசியல் சரித்திர சாதனை இயக்கம் ஹிண்ட்ராஃப் தலைவரும் ஹிண்ட்ராஃப் அமைப்பின் அரசியல் கரமான மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபி தலைவருமான பொன்.வேதமூர்த்தி, தான் வெளியிட்ட ஓர் அறிக்கையில் தவறு இருப்பதை உணர்ந்த அடுத்த சில மணி நேரத்தில் மன்னிப்பு கேட்டிருப்பது, தேசிய அரசியல் நெறிமுறையின் அடையாளமாகவும் தலைமைத்துவ பண்பின் மாண்பாகவும் அமைந்துள்ளது என்று கட்சியின் தேசிய உதவித் தலைவர் டத்தோ செல்வம் செல்லையா தெரிவித்துள்ளார்.

மலேசிய அரசியலில், ஒரு தலைவர் வெளியிட்ட பொது அறிக்கையில் ஒரு தவற்றை உணர்ந்தவுடன் வெளிப்படையாகவும் மனதாரவும் மன்னிப்பு கேட்டிருப்பது, முன்மாதிரி நடவடிக்கையாகவும் அரசியலில் நேர்மையின்  வெளிப்பாடாகவும் அமைந்துள்ளது. 

இதுபோன்ற சூழலை எதிர்கொள்ளும்பொழுது, பெரும்பாலும் ‘தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது’ என்று விளக்கமளிக்கப்படும்; அல்லது வேறேதும் சாக்குபோக்கு கூறப்படும். ஆனால், புதுமைத் தலைவரான பொன்.வேத மூர்த்தி,  அப்படி யெல்லாம் சமாளிக்காமல், 12 மணி நேரத்திற்குள் தன்னுடைய தவற்றை விரைவாக ஒப்புக்கொண்டு, அதைச்சீர்செய்யும் விதமாக உடனே வருத்தமும் மன்னிப்பும் தெரிவித்திருப்பது, மலேசிய அரசியலில் ஒரு புதிய பரிமாணத்தையும் பொறுப்பேற்கும் துணிவையும் வெளிப்படுத்தி உள்ளது; தவிர, பொன்.வேதமூர்த்தி  மலேசிய அரசியலில் புதுப்பாங்கையும் ஏற்படுத்தி இருக்கிறார்.

பொன்.வேதமூர்த்தி, தன்னுடைய அரசியல் பயணத்தில் ஒரு தவற்றை மட்டும் சரிசெய்யவில்லை; அரசியல் நெறிமுறைக்கு ஒரு புதிய அளவுகோலை அமைத்துள்ளார், மேலும், ஓர் அரசியல் தலைவர் என்பவர், நேர்ந்துவிட்ட தவற்றை ஏற்றுக்கொள்ளும் துணிவையும் திருத்திக் கொள்ளும் மாண்பையும் கொண்டிருக்க வேண்டும் என்பதற்கு தக்க சான்றாக பொன்.வேதமுர்த்தி விளங்குகிறார் என்று டத்தோ செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

  • Facebook
  • X
  • LinkedIn
  • WhatsApp
  • Email
Previous article: Apabila Kerajaan Menindas, Rakyat Harus Bangkit Prev Next article: Waytha Moorthy’s Apology - Elevating Political Ethics and Redefining Leadership in Malaysia Next